Friday 2 March 2012

சிறுநீரகமும் யோகாவும்


சிறுநீரகமும் யோகாவும்


அவரைக்கொட்டை போல் தோற்றமுடைய சிறுநீரகங்கள் இரண்டாக இருக்கும். ஒவ்வொன்றும் 4 (அ) 5 அங்குல நீளம் உடையது. ஆரோக்கியமான மனிதனுக்கு ஒரு சிறுநீரகமே போதுமானது. சிலர் ஒரு சிறுநீரகத்துடனேயே பிறக்கின்றனர். சிறுநீரகத்தின் முக்கியமான பணி ரத்தத்திலிருந்து கழிவுப்பொருட்களை நீக்கி சிறுநீராக வெளியேற்றுவது.
சிறுநீரக கோளாறுகள்
சிறுநீரக பாதையில் தொற்று நோய்கள், சிறுநீரக கற்கள், சிறுநீரக பாதை அடைப்பு, சிறுநீர் கழிவதில் பிரச்சனைகள் முதலியன.
சிறுநீரக கோளாறுகளை போக்கும் ஆசனங்கள்
செய்ய வேண்டிய ஆசனங்கள்
சூரிய நமஸ்காரம் – சிரசாசனம், சர்வங்காசனம், சலபாசனம், தனுராசனம், மத்ஸ்யேந்திராசனம், விருச்சிகாசனம், சவாசனம் முதலியன.
பிராணாயாமா- அனுலோமா – விலோமா, உஜ்ஜையி, நாடிசுத்தம்
சில டிப்ஸ்
1. அதிக சிறுநீர் போவதை தேன் கட்டுப்படுத்தும்.
2. குறைவாக சிறுநீர் போனால் உலர்ந்த திராட்சை ஜுஸ் குடிக்கவும்.
3. சிறுநீர் கழிக்கையில் வலி உண்டானால் பரங்கிக்காய் சாற்றை குடிக்கவும்.
4. நிறைய தண்ணீர் குடிக்கவும். இளநீர் குடிப்பது பல சிறுநீரக பாதிப்புகளை போக்கும்.
5. 2 (அ) 3 அத்திப்பழங்களை தண்ணீரில் 10 மணி நேரம் ஊற வைத்து பிறகு குடிக்கவும்.

No comments:

Post a Comment