Friday 2 March 2012

வஜ்ராசனம்

வஜ்ராசனம்

‘வஜ்ரம்’ என்றால் வைரம் என்று பொருள். இந்த ஆசனம் வைரம் போல் தோன்றுவதாலும், வைரம் போல் உடலை வலுவாக்குவதாலும், இந்தப் பெயர் கொடுக்கப்பட்டது.
செய்முறை
1. கால்களை நீட்டிக் கொண்டு உட்காரவும்.
2. ஒரு காலை மடித்து குதிகால் பிட்டத்தை தொடுவது போல் வைத்துக் கொள்ளவும்.
3. இதே போல் மற்றொரு காலையும் மடித்து பிட்டத்தின் அடியில் வைக்கவும்.
4. பிட்டம் குதிகால்களின் மீது அழுத்திக் கொண்டு இருக்க வேண்டும். அதாவது உடல் எடை முழுவதும் குதிகால்களின் மேல் இருக்கும்.
5. பாதங்கள் மேல் நோக்கி இருக்க வேண்டும். முதுகு, தலை நேராக இருக்க வேண்டும்.
6. கைகளை ஒன்றின் மேல் ஒன்றாக (யோக முத்திரையாக) உடல் நடுவே, அடிவயிற்றில், தொடைகளை தொட்டுக் கொண்டு வைத்துக் கொள்ளவும். இல்லை கைகளை கால் முட்டிகளின் மேல் வைத்துக் கொள்ளலாம்.
7. இந்த நிலையில் தியானம் செய்யலாம். இல்லாவிட்டால் சில வினாடிகள் இருந்த பிறகு கால்களை அகற்றி நார்மல் நிலைக்கு வரவும்.
8. ஆசன நிலையில் இருக்கும் போது நன்றாக சுவாசிக்கவும்.
பலன்கள்
1. உடல் வலிமையடையும். இளமையாக இருக்கும். பாலியல் பலவீனம் உள்ளவர்களுக்கு ஏற்ற ஆசனம்.
2. தட்டை பாதம் உள்ளவர்களுக்கு பாதம் சரியாகும்.
3. காலில் நரம்பு சுருண்டிருந்தால் அது நீங்கும்.
4. இதய நோய்களுக்கு நல்ல ஆசனம்.
வஜ்ராசனம்
குதிகால், உடல், எடை, பாதங்கள், முதுகு, யோக, முத்திரையாக, உடல், அடி, வயிற்றில், தொடைகளை, கால், முட்டிகளின், தியானம், உடல், பாலியல், ஆசனம், பாதம், காலில், இதய, நோய்களுக்கு,
வஜ்ராசனம்’வஜ்ரம்’ என்றால் வைரம் என்று பொருள். இந்த ஆசனம் வைரம் போல் தோன்றுவதாலும், வைரம் போல் உடலை வலுவாக்குவதாலும், இந்தப் பெயர் கொடுக்கப்பட்டது.செய்முறை
1. கால்களை நீட்டிக் கொண்டு உட்காரவும்.
2. ஒரு காலை மடித்து குதிகால் பிட்டத்தை தொடுவது போல் வைத்துக் கொள்ளவும்.
3. இதே போல் மற்றொரு காலையும் மடித்து பிட்டத்தின் அடியில் வைக்கவும்.
4. பிட்டம் குதிகால்களின் மீது அழுத்திக் கொண்டு இருக்க வேண்டும். அதாவது உடல் எடை முழுவதும் குதிகால்களின் மேல் இருக்கும்.
5. பாதங்கள் மேல் நோக்கி இருக்க வேண்டும். முதுகு, தலை நேராக இருக்க வேண்டும்.
6. கைகளை ஒன்றின் மேல் ஒன்றாக (யோக முத்திரையாக) உடல் நடுவே, அடிவயிற்றில், தொடைகளை தொட்டுக் கொண்டு வைத்துக் கொள்ளவும். இல்லை கைகளை கால் முட்டிகளின் மேல் வைத்துக் கொள்ளலாம்.
7. இந்த நிலையில் தியானம் செய்யலாம். இல்லாவிட்டால் சில வினாடிகள் இருந்த பிறகு கால்களை அகற்றி நார்மல் நிலைக்கு வரவும்.
8. ஆசன நிலையில் இருக்கும் போது நன்றாக சுவாசிக்கவும்.
பலன்கள்
1. உடல் வலிமையடையும். இளமையாக இருக்கும். பாலியல் பலவீனம் உள்ளவர்களுக்கு ஏற்ற ஆசனம்.
2. தட்டை பாதம் உள்ளவர்களுக்கு பாதம் சரியாகும்.
3. காலில் நரம்பு சுருண்டிருந்தால் அது நீங்கும்.
4. இதய நோய்களுக்கு நல்ல ஆசனம்.

No comments:

Post a Comment